மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,. தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

லால்பேட்டை (05/11/2010) வெள்ளிகிழமை : லால்பேட்டையில் இருந்து இந்த வருடம் புனித ஹஜ் யாத்திரைக்கு தனியார் டூரிஸ்ட் நிறுவனங்கள் மூலம் செல்ல இருந்த அனைத்து ஹஜ் பயணிகளின் பயணம் திடிரென்று இன்று ரத்தானது என்று அறிவிப்பு வெளியானது
அதிர்ச்சியும், வேதனையும் :
இந்த வருடம் புனித ஹஜ் பயணம் செல்வதற்காக நமதூர் , சிதம்பரம், ஆயங்குடி, புங்கனூர், பின்னத்தூர் மற்றும் கொள்ளுமேட்டை சேர்ந்தவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பணமும் செலுத்திய நிலையில், இன்று ஹஜ்ஜுக்கு புறப்பட்டு செல்ல வேண்டியவர்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் தரும் விதமாக இந்த விசா கிடைக்கத செய்தி கிடைத்தது , இதனால் அனைவருக்கும் மிகுந்த வருத்தமடைந்தர்கள்.