அஸ்ஸலாமு அலைக்கும் ஆயங்குடி இத்ரீஸ் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, November 27, 2010

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல்.  வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல்.  தங்களின் பொறுப்பை மறந்து..,. தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம் பாசம்ஃபேஷன்என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.
 
ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன்,  கம்ப்யூட்டர் கிளாஸ்,  ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல்,  இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.
 

Friday, November 26, 2010

தூய எண்ணம் வேண்டும்

நூல்: புஹாரி 1, முஸ்லிம் 4692, திர்மிதி 1698
உமர் இப்னு ஹத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள்:
    'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கின்றது. ஒருவரது ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் இருந்தால் அது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஆகும். ஒருவரது ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணம் செய்வார். எனவே இவர்களது ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகின்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
விளக்கம்:
நம்முடைய எந்தச் செயலாக இருந்தாலும் எண்ணம் தான் அதன் அடிப்படை, அந்த எண்ணம் சரியாக அமைய வில்லையானால் நமது செயலுக்கேற்ற கூலியை பெற முடியாதவர்களாக ஆகிவிடுவோம். மறுமையில் கூலி கிடைக்கும் என்று எண்ணிச் செய்யும் செயலுக்கு கூலி கிடைக்காமல் போனால், அதை விட பெரிய நஷ்டம் வேறு எதுவாக இருக்க முடியும்?

இந்த ஹதீஸ் நம்முடைய செயல்களுக்குறிய எண்ணம் எவ்வாறு அமைய வேண்டும், எவ்வாறு அமைந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்க்கு தெளிவான விளக்கத்தை கொடுக்கிறது.

ஒரு செயல் இறைவனால் அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் மூன்று விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் கட்டளை அல்லது அங்கீகாரம் இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும்.
இஃக்லாஸ் எனும் தூய எண்ணம் இருக்க வேண்டும்.
மூன்றாவதான விதியைத் தான் இந்த ஹதீஸ் நமக்குச் சொல்கிறது.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மட்டும் செய்யாத எந்தச் செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கான சான்றுகளை ஏராளமாக ஹதீஸ்களில் காண்கிறோம். உதாரணமாக,

Wednesday, November 24, 2010

இஸ்லாமிய பார்வையில் கிண்டலும் கேலியும்

தொகுப்பு  : முஹம்மது ஆரிப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாதுல்லாஹி வ பரகதுஹூ 
பிஸ்மில்லாஹ் ஹிரஹ்மான் னிர்ரஹீம்
  • பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது
  • பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது
  • போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
  • ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது
  • ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது
  • இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மட்டுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.

பொய் பேசுவதன் தீமைகள்: -

1)
பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -

அல்லாஹ் கூறுகிறான் :
16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)

3)
பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி

4)
பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், 'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள் '(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?' என்று கூறினர்; (அப்பொழுது) அவர், '(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)

Friday, November 12, 2010

கண்கள் கவனம்

நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதி...கம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

Monday, November 8, 2010

முஸ்லிம்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லை

பிறப்புரிமை, கைதியின் கதை ஆகிய ஆவணப் படங்களை இயக்கி, தமிழக முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆளூர் ஷாநவாஸ். இளம் ஆவணப்பட இயக்குனரான அவர், தற்போது காயிதே மில்லத் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முஸ்லிம்களின் பிரச்சனைகளை, வரலாறுகளை, சேவைகளை பொது சமூக மத்தியில் எடுத்துச் செல்ல ஆவணப்படங்கள் தான் மிகச் சரியான ஆயுதம் எனச் சொல்லும் ஷாநவாஸ் உடன் ஒரு நேர்காணல்.
பல்வேறு விசயங்களை மையப்படுத்தி மேலும் சில புதிய ஆவணப்படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆவணப்படம் என்பது என்ன?

Documentary என்பதை ஆவணம் என்ற பாரம்பரியமான தமிழ்ச் சொல் குறிக்கும். அதனால் Documentary Film என்ற பதத்தை ஆவணப்படம் என்று நல்ல தமிழில் இன்று அழைக்கின்றோம். இதற்கு முன் இச்சொல்லை தகவல் படம், விவரணப் படம், செய்திப் படம் என்றெல்லாம் கூட அழைத்தார்கள். ஆனால் காலப்போக்கில் ஆவணப்படம் என்ற பெயர் சூட்டப்பட்டு அதுவே பொருத்தமானதாய் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைத்திருக்கிறது.

Saturday, November 6, 2010

ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி



லால்பேட்டை (05/11/2010) வெள்ளிகிழமை : லால்பேட்டையில் இருந்து இந்த வருடம் புனித ஹஜ் யாத்திரைக்கு தனியார் டூரிஸ்ட் நிறுவனங்கள் மூலம் செல்ல இருந்த அனைத்து ஹஜ் பயணிகளின் பயணம் திடிரென்று இன்று ரத்தானது என்று அறிவிப்பு வெளியானது

அதிர்ச்சியும், வேதனையும் :
இந்த வருடம் புனித ஹஜ் பயணம் செல்வதற்காக நமதூர் , சிதம்பரம், ஆயங்குடி, புங்கனூர், பின்னத்தூர் மற்றும் கொள்ளுமேட்டை சேர்ந்தவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பணமும் செலுத்திய நிலையில், இன்று ஹஜ்ஜுக்கு புறப்பட்டு செல்ல வேண்டியவர்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் தரும் விதமாக இந்த விசா கிடைக்கத செய்தி கிடைத்தது , இதனால் அனைவருக்கும் மிகுந்த வருத்தமடைந்தர்கள்.