அஸ்ஸலாமு அலைக்கும் ஆயங்குடி இத்ரீஸ் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஊரைபற்றி

ஆயங்குடி
ஆயங்குடி (Ayangudi), இந்தியாவில் சமூக நீதி காத்த பூமியான தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும்.
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றதொகுதி
ஆயங்குடி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்றதொகுதிக்கும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. சட்டமன்ற உறுப்பினராக திரு.ரவி குமார் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினராக வி.சி கட்சியின் தலைவரான திரு. திருமாவளவனும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர்.   
மக்கள் தொகை
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,817 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 898 ஆண்கள், 929 பெண்கள் ஆவார்கள். ஆயங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79.47% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும்.

ஆயங்குடி எங்கு பார்த்தாலும் பசுமை சூழ்ந்த முற்றிலும் நெல் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. மேற்கு புறத்திலிருந்து வடக்கு புறம் ஓடுகின்ற வடவாறும் தெற்கே ஓடுகின்ற கொள்ளிடமும் முக்கிய நீர் ஆதாரங்கள் ஆகும . சுமார் இரண்டாயிரம் பேர்கள் வசிக்கக் கூடிய இவ்வூரில் ஒரு உயர்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை, இந்தியன் வங்கி மற்றும் தபால் அலுவலகம் ஆகிய வசதிகள் உள்ளது.
அருகில் உள்ள சிறுநகரங்கள்
அருகில் உள்ள சிறுநகரங்கள் காட்டுமன்னார்கோயில் மற்றும் லால்பேட்டை பேரூராட்சிகள், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி மற்றும் நெய்வேலி என்பன இவ்வூரைச் சுற்றி உள்ள பெருநகரங்கள் ஆகும். இந்த ஊர்களில் இருந்தும் மற்றும் திருச்சி, சென்னை ஆகிய மாநகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. தற்போது கொள்ளிட ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலம் ஆயங்குடியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆயங்குடியைச் சார்ந்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தாலும், சமீப காலமாக அதிகமானவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.

நூற்றுக்கும் அதிகமான பட்டதாரிகளையும், ஐந்து கல்லூரி பேராசிரியர்களையும், இரண்டு மருத்துவர்களையும் கொண்டிருப்பதும், அவர்களின் கூட்டு முயற்சியால் தனியாக ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருவதும் சிறப்பிற்குரிய செய்தியாகும்.

நன்றி  : www.ayangudi.net