அஸ்ஸலாமு அலைக்கும் ஆயங்குடி இத்ரீஸ் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, December 2, 2010

நாராயண சாமியும் நஜ்ஜாத்தும் !

நாரா : வணக்கம் அண்ணாச்சி ! ஒங்களைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன் !
 
நஜ்ஜாத் : அப்பிடியா ? என்ன விஷயம் ?
 
நாரா :  நீங்க மட்டும் பெருநாளை தனியாக்  கொண்டாடுறீங்களே ஏன் ?
 
நஜ்ஜாத் : நாங்க எப்போதுமே அப்படித்தான் . முஸ்லிம்களோடு ஒண்ணுசேர மாட்டோம். எங்க வழி தனி வழி . இப்போ முஸ்லிம்கள் மேற்கே நோக்கி தொழுவுராங்கோ.  நாங்க அதை மாத்துறத்துக்கு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுக்காக "அஹ்மக்" கமிட்டி ஒன்னு அமைச்சு இருக்கோம். ஜக்காத்து வர்சா வருஷம் கொடுக்கணும் என்று முஸ்லிம்கள் சொல்றாங்க ! நாங்க அதை ஏற்றுக்கொள்ளவில்லை !
 
நாரா : அப்ப நீங்க முஸ்லிமா அல்லது வேற சாதியா ?
 
நஜ்ஜாத் : முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் தனிப்பிரிவு .
 
நார : அப்போ ஒருத்தன் முஸ்லிமா மாற நெனச்சா எதுலே சேரனும் ?
 நஜ்ஜாத் : எங்க பிரிவுக்கு வந்துடலாம் . எங்க பிரிவுக்கு வந்துட்டா அஞ்சு வேளை தொழனும்னு அவசியம் இல்லை. தொப்பி போட்டு  முஸ்லிம்னு காட்ட வேண்டிய கட்டாயம்
 இல்லை. பண்டாரம் பரதேசி மாதிரி தாடி வச்சுக்கலாம் . சம்பாத்தியம் பண்ண ஆயிரம் வழி இருக்கு. எங்களில் பீடிக்கு லாட்டரி அடிச்ச கேடிகள் எல்லாம் இப்போ கொடீஸ்வரங்களாகி கார் பங்களாவோட வசதியா இருக்காங்கோ. நீங்க என்ன தப்பு செஞ்சாலும் எங்க தலைவர்
தன் வாதத் திறைமையால் காப்பாத்தி விடுவாரு !
 
நாரா : அடே அப்பா ! இப்பிடி ஒரு மதம் இருப்பது எனக்கு தெரியாமப் போச்சே !. ..
 
நஜாத் : நீங்க வந்து பாருங்கோ உங்களை காட்டியே ஒரு கோடி சம்பாதிச்சிடுவோம். நாங்க போய்க் கேட்டாப் போதும். பெத்த தாய் தகப்பனுக்குக் கூட ஒரு பைசா கொடுக்காதவன் எல்லாம் நாங்க போய்க் கேட்டா தாராளமாத் தருவாங்கோ. எங்களிடம் தொழில் ரகசியத்த படிச்ச பிறகு நீங்களும் ஜமாய்க்கலாம். ஆலிம்சாமார்கள்
பாத்தியா ஓதி மௌலீத் ஓதி சம்பாத்தியம் பண்ணுராங்கோ என்று ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி நீங்கள்  ஆயிரக் கணக்கில் சம்பாதித்து விடலாம். பொய்யை சாமர்த்தியமாக சொல்லத் தெரிந்தால் ஆயுசு முழுக்க சம்பாத்தியம் பண்ணலாம். இடையில் கொஞ்சம் ஆதாரம் - ஹதீஸ் என்று அள்ளிவிடத் தெரியணும். வலிமார்களையும் சஹாபாப் பெருமக்களையும் நாசூக்காக திட்டத் தெரிஞ்சிருக்கணும். அதுக்கெல்லாம் நாங்க பயிற்சி கொடுப்போம். அடுத்தவன் பொண்டாட்டிய அபகரிச்சு வச்சிக்கிட்டு ஒலிமார்களை திட்டணும். நாங்க இதுக்கின்னே ஒருத்தரை நேர்ந்து விட்டிருக்கோம்.
 
நாரா : அடடா ! கேட்கும் போதே புல்லரிக்கிதுங்கோ ! ஒங்க கடவுள் கொள்கை எப்படி ?
 
நஜ்ஜாத் : ரொம்ப லேசு : ஆண்டவன் இப்போதைக்கு ஒருவன். அவனுக்கு உருவம் இருக்கு ....
 
நாரா (இடைமறித்து ) அது என்னங்க புதுசா இருக்கு "இப்போதைக்கு ஒருவன்-உருவம் இருக்கு" என்று சொல்றீங்க ? நாங்க இந்துக்களே கூட உருவம் இல்லேன்னு தான் நம்புறோம். நீங்க எப்பிடி புதுசா சொல்றீங்க ?
 
நஜ்ஜாத் : எல்லோரும் சொல்றமாதிரி நாமும் சொன்னா சுவாரசியமும் இருக்காது; சம்பாத்தியமும் பண்ண முடியாது. முதல்ல நம்ம என்ன சொன்னாலும் நம்புகிற  கூட்டத்தை  உருவாக்கணும். அது சிந்திக்கக்  கூடிய கூட்டமா இருக்கக் கூடாது . அதுக்குப் பிறகு நாம என்ன சொன்னாலும் அந்தக் கூட்டம் நாம் சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டும். அதுக்கு பிறகு நம்ம காட்டுல மழையோ மழைதான். இப்போதைக்கு ஒருவன் என்றால் நாங்கள் கடுமையான் ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கோம் கூடிய சீக்கிரம் உங்களைப் போல பல உருவங்களை உருவாக்கி உங்களுக்குப் போட்டியா வந்துருவோம். உலகத்திலேயே இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொன்ன முதல் தலைவர் எங்கள் தலைவர் தான் . எங்கள் மதத்தில் இருந்து கொண்டு எந்த தப்பு செஞ்சாலும் மூடி மரச்சிடுவோம். ஆனா எங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் எல்லாத்தையும் அம்பலத்திற்கு கொண்டு வந்து மீடியாக்களில் நாற வச்சிடுவோம். சமீபத்தில் ஒருவரை அப்பிடித்தான் செஞ்சோம்.எங்கள் இயக்கத்திலுருந்தே அவர் பிச்சுக்கொண்டு போய்விட்டார்.
 
நாரா : ஆஆஹா ! கேட்கவே ரொம்ப சுவாரசியமா இருக்கே ! இப்படி ஒரு மதத்தைப் பற்றி இதுவரையில் நான் கேள்விப் பட்டதே இல்லியே !
 
நஜ்ஜாத் : நாங்க பொதுவா  முஸ்லிம்கள் யாருக்கும் சலாம் சொல்ல மாட்டோம்.முஸ்லிம்கள்  யாரும் எங்களுக்கு சலாம் சொன்னாலும் பதிலும் சொல்ல மாட்டோம். ஆனா நீங்க சலாம் சொன்னா நாங்க பதில் சொல்வோம். அதுக்கும் எங்களிடம் ஆதாரம் வச்சிருக்கோம். நாங்கள் ஈரப்  பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவதில்  கில்லாடிகளாக்கும் !
 
நாரா : ஆஆமாமாம் ! புரியிது ! புரியிது ! நான் இஸ்லாத்தைப் பற்றி தெரிஞ்சிக்கணும் என்றுதான் உங்களிடம் வந்தேன். நீங்கள்  என்னடா என்றால் ஒரு பேட்டை ரௌடியை விட மோசமான ஆளா
இருப்பீங்க போல இருக்கே. இப்பதான் பத்திரிகையில் கூட ஒரு செய்தி  பார்த்தேன்  ஒங்க ஆளுங்க துப்பாக்கி வச்சு ரெண்டு பேரை சுட்டு போட்டான் களாமே ! அய்யா சாமி ஆளை விடுங்க !
நபி நேசன்

No comments:

Post a Comment